96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எஸ்பிஐ ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா.? அப்போ உங்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு!
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோர் வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஓடிபி எண் கட்டாயம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
ஏடிஎம் கார்டுகள் மூலம் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏடிஎம் மையங்களில் 10 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஓடிபி எண் அவசியமாக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த சேவை தற்போது 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இனி எஸ்பிஐ ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோர் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம் மையங்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவேண்டும் என்றால் வங்கியில் இருந்து வரும் ஓடிபி எண்ணை பதிவிடவேண்டியது அவசியம்.