குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
போங்கய்யா, நான் கைலாசா நாட்டுக்கு போறேன்! நம்ம நித்யானந்தா இருக்கார்! சீமான் திடீர் முடிவு! ஏன் தெரியுமா?
குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
மேலும் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதால் போராட்டம் பெருமளவில் வெடித்தது. மேலும் சாலைகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இரு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் இதனால் டெல்லியில் வன்முறைகள் வெடித்தது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம் தொடர்கிறது. மேலும் இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியும் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அப்பொழுது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, அதிமுக அரசு வரலாற்றில் பெரும் பிழையை தொடர்ச்சியாக செய்து வருகிறது.
மேலும் எனக்கு குடியுரிமை இல்லையா ஒன்றும் பிரச்சனை இல்லை. கைலாசான்னு ஒரு நாடு உருவாகியுள்ளது, எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும், அவரது கைலாசா நாடும் உள்ளது. அங்கு சென்றுவிடுவோம் என நக்கலாக கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.