96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
செல்பி மோகத்தால் வந்த விளைவு !! 150 அடி உயர பாறையில் இருந்து கீழே தவறி விழுந்த புதுமணப்பெண்..!
கேரள மாநிலம் கொல்லம் அருகே பரவூர் பகுதியை சேர்ந்தவர் வினுகிருஷ்ணன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்த்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி இன்று இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் தான் நேற்று இருவரும் அருகில் உள்ள ஒரு பாறை குளத்திற்கு போட்டோ எடுப்பதற்காக சென்று உள்ளனர். கல்குவாரியான அந்த பகுதியில் 150 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சாந்த்ரா கால் தடுமாறி அங்கிருந்த பாறை குளத்திற்குள் விழுந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வினு கிருஷ்ணன் சாந்தராவை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக வினு கிருஷ்ணன் சாந்தராவை காப்பாற்றி அருகில் இருந்த பாறையை பிடித்தவாறு இருவரும் கூச்சலிட்டு உள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்கள் இருவரையும் மீட்டு கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமன தம்பதிகள் விபத்துக்குள்ளானது குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.