96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ட்யூஷன்ஆசிரியர்.! போக்சோ சட்டத்தில் கைது.!
உத்திர பிரதேசம் மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை டியூசன் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக டியூஷன் ஆசிரியரை கைது செய்த போலீஸ் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி அவரது வீட்டிற்கு அருகே உள்ள மணிஷ் பாண்டே என்ற 25 வயது ஆசிரியரிடம் டியூஷன் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அந்த ஆசிரியர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. மேலும் அதனை படம் எடுத்து வைத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சிறுமி அளித்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய காவல்துறை டியூசன் ஆசிரியர் மனிஷ் பாண்டேவை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் இதை வெளியே சொன்னால் சிறுமியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆசிரியரின் மீது கற்பழிப்பு மற்றும் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழுும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியரை சிறையில் அடைத்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.