ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்..! திருவிழாவுக்கு சென்ற இளம் பெண்.. கடத்தி சென்று சிதைத்த சிறுவர்கள்..!
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா ஒன்று நடைபெற்றது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக நாடகம் ஒன்று நடைபெற்றது. எனவே இந்த நாடகத்தை பார்ப்பதற்காக அனேக பேர் அங்கு கூடியுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாடகம் பார்த்துவிட்டு தனியாக தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று அந்த இளம் பெண்ணை கடத்தி சென்றுள்ளது. மேலும் அந்த மர்ம கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த இளம் பெண்ணைக் கொண்டு சென்று கூட்டு பாலில் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து அந்த இளம்பெண் அலரி சத்தம் போடவே அந்த மர்ம கும்பலானது அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட் 7 பேரில் ஐந்து பேர் 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இளம் பெண்ணை கடத்தி சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.