96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே.! உயிரிழந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி எடுத்து சென்ற மகன்கள்! இதயத்தை நொறுங்க வைத்த சம்பவம்.!
அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால் உயிரிழந்த தனது தாயின் உடலை மரப்பலகையில் கட்டி 80 கிலோமீட்டர் பைக்கிலேயே மகன்கள் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுப்பூர் மாவட்டம் கோடாரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய் மந்த்ரி யாதவ். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவரது மகன் சுந்தர் யாதவ் சேர்த்துள்ளார். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையினால் ஜெய்மந்த்ரி ஷாடோல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்மந்த்ரி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை மருத்துவமனையில் இருந்து 80 கிமீ தூரத்திலுள்ள அவரது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனியார் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல கேட்டபோது அவர்கள் 5000 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால் சுந்தர் யாதவால் அந்தப் பணத்தை கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் அவர் 100 ரூபாய்க்கு கட்டை ஒன்றை வாங்கி, அதன் மேல் தனது தாயின் உடலை வைத்து கட்டியுள்ளார். பின்னர் அந்த உடலை பைக்கில் பின்னால் வைத்து, அதனை மற்றொரு சகோதரரை பிடித்துகொள்ள கூறி தங்களது கிராமத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.