மும்பையில் பரபரப்பு.. சரிந்து விழுந்து தரைமட்டமான 4 மாடி கட்டிடம்... வைரல் வீடியோ..!



there-is-excitement-in-mumbai-4-storey-building-collaps

மும்பையில் பாழடைந்த நான்கு மாடி கட்டிடம் சரிந்து தரைமட்டமான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில், போர்வலி மேற்கு சாய்பாபா நகர் பகுதியில் இருக்கும் கீதாஞ்சலி என்ற கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பாழடைந்து இருந்தது. கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், இதில் வசித்தவர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை பரபரப்பாக இருந்த சாலையில் திடீரென கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு குடியிருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறி இருந்தாலும் வேறு யாராவது கட்டிடத்தில் சிக்கி இருக்கிறார்களா என்று ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழும் போது அருகிருந்த மக்கள் அலறி அடித்து ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் காவல் துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் யாரும் இதனால் பாதிக்கப் படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.