கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் சோகம்; 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி.! தூத்துக்குடியில் பரிதாபம்.!



Thoothukudi 2 Workers Died Poison Gas Attack 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர், ஆனந்த் நகர் பகுதியில் கிணறு ஒன்று பல மாதங்களாக மூடப்பட்டு இருந்துள்ளது. இதனை சுத்தம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், இன்று 4 பேர் கொண்ட தொழிலாளர்கள் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

முதலில் மாரியப்பன் என்ற தொழிலாளி கிணற்றை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. எந்த சத்தமும் கேட்கவில்லை. இதனால் பதறிப்போன மற்றொரு தொழிலாளி கணேசன், தான் சென்று பார்ப்பதாக கூறி உள்ளே இறங்கியுள்ளார். 

இதையும் படிங்க: பள்ளி வேன் ஓட்டுனருக்கு மாரடைப்பு; நொடியில் 20 மாணவ-மாணவிகளின் உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!

2 தொழிலாளர்கள் பலி., 2 பேர் கவலைக்கிடம்

முதலில் இறங்கிய மாரியப்பன் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், மாரியப்பனும் விஷ வாயு பிடியில் சிக்கி மயங்கி உயிரிழந்தார். கிணற்றுக்குள் சென்று இருவரும் மீண்டு வராத காரணத்தால், பிற 2 தொழிலாளர்கள் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது அவர்களும் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தொழிலாளர்களை மீட்ட காவலர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாரியப்பன் மற்றும் கணேசன் ஆகியோரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், எஞ்சிய 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். 

இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதையும் படிங்க: பாண்டிச்சேரி இன்பச்சுற்றுலா இறுதிச்சுற்றுலாவான சோகம்; ஐடி ஊழியர்கள் இருவர் பலி.!