பிளவுபடுகிறது அதிமுக? பாஜகவின் மாஸ்டர் பிளான் என்ன? - சட்டத்துறை அமைச்சரின் பகீர் தகவல்.!



TN Law Minister Ragupathy about AIADMK Party Broken by BJP 

 

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடந்த தேர்தல் வரை தங்களுக்குள் கூட்டணி அமைத்து அரசியல் பணியை மேற்கொண்டு வந்த நிலையில், 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும் கூட்டணி உடைந்துபோனது. 

அதிமுகவா? பாஜகவா? என்ற பேச்சு தமிழ்நாட்டில் எழுந்து, பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் உருவானது. அதிமுக 2024 மக்களவை தேர்தலை தேமுதிகவுடன் கைகோர்த்து களம்கண்டது. தொடக்கத்தில் இருந்தே அதிமுகவை பாஜக பிளவுபடுத்துகிறது என அவ்வப்போது திமுக குற்றசாட்டை முன்வைத்து வந்தது.

இதையும் படிங்க: அதிகாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு - ஆம்னி பேருந்து மோதி விபத்து; 24 பேர் காயம்.!

 

மீண்டும் அதிமுக உடைகிறது?

இதனை உறுதி செய்யும் வகையில், அதிமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியின் இன்றைய தலைமையான எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டார். இதனால் தொடர்ந்து அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 04 ம் தேதிக்குள் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்படும். அதனை பாஜக செய்து முடிக்கும் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தாய்ப்பாசத்தால் கொலையாளியான 17 வயது மகன்.! தாயை கண்முன் அடித்த ரௌடியை நண்பருடன் சேர்த்து கொன்ற பயங்கரம்.!