தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு; இன்றைய விலை நிலவரம் இதோ.! 



Today Gold Silver Price 29 July 2024 

 

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது. 

குறைந்த தங்கத்தின் விலை

இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தது. இதனால் நகை வாங்க நினைத்தோர் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர். இதனிடையே, மக்களவையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி குறைத்து அறிவிக்கப்பட்டது.  

இதனையடுத்து தங்கத்தின் விலை இந்தியாவில் குறைய தொடங்கியது. இன்று சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை ரூ.50 கிராமுக்கு குறைந்து ரூ.6415 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் படிங்க: ரூ.5 இலட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்; குவியும் பாராட்டுக்கள்.!

சவரன் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ரூ.51,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து, ரூ.89500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் வெள்ளி ரூ.89.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

இதையும் படிங்க: மனைவி விபச்சார வழக்கில் கைது.!! கணவரின் ஆத்திரத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்.!!