96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எமனாக மாறிய லாலி பாப்... 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோக முடிவு.!
தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த பத்து வயது சிறுவன் லாலிபாப் சாப்பிடும் போது தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லகவத் கிருஷ்ணா. இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதியினருக்கு கௌதம் என்ற 10 வயது மகன் இருந்தான். இந்தச் சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாணவன் பள்ளி முடிந்து வரும் போது அங்குள்ள கடை ஒன்றில் லாலிபாப் வாங்கி சாப்பிட்டு இருக்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக லாலிபாப் அவனது தொண்டையில் சிக்கி இருக்கிறது. இதனால் மூச்சு விடும் மாணவன் மிகவும் சிரமப்பட்டு சுயநினைவு இழந்துள்ளான்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.