மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருப்பதியில் ஓவர் சேட்டை.. ஆந்திரா போலிசிடம் சிக்கிய டிடிஎஃப் வாசன்!!
பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசன். அவர் பல பைக் சாகசங்கள் செய்து அந்த வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானவர். மேலும் அடிக்கடி ஏதேனும் வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்குள்ளாவார். அவர் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
திருப்பதியில் சேட்டை
டிடிஎஃப் வாசன் அண்மையில் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த நிலையில் அங்கு கேட்டை திறந்துவிடுவது போல் சென்று பிராங்க் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "வாங்க ஏழைகளா.." 5,000 கோடி ரூபாய் செலவில் நடந்த சிக்கன கல்யாணம்.!! ஆனந்த் அம்பானி திருமணத்தின் ஷாக்கிங் புள்ளிவிவரம்.!!
டிடிஎஃப் வாசன் மீது பாய்ந்த வழக்கு
இவரது இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தரிசன வரிசையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் டிடிஎஃப் வாசன் மீது திருமலைகாவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.