மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வாங்க ஏழைகளா.." 5,000 கோடி ரூபாய் செலவில் நடந்த சிக்கன கல்யாணம்.!! ஆனந்த் அம்பானி திருமணத்தின் ஷாக்கிங் புள்ளிவிவரம்.!!
இந்தியாவில் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணம் 5,000 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த திருமண விழாவில் இந்தியாவிலுள்ள தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்லாயிரக்கணக்கான பிரபலங்கள் கலந்து கொண்டதோடு வெளிநாட்டைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தை குறைந்த செலவில் நடத்தப்பட்ட திருமணம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்
ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஆனந்த் அம்பானி. இவருக்கும் என்கோர் ஹெல்த் கேர் என்ற மருந்து தயாரிப்பு நிறுவன அதிபரின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு முன் நடைபெற்ற விழா அம்பானியின் சொந்த ஊரான ஜாம் நகரில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்த பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு 1,230 கோடி செலவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் ட்ரைவில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உலகின் பல்வேறு பணக்காரர்கள் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட அரசியல் தலைவர்களும் தமிழ் சினிமா நட்சத்திரங்களும் விளையாட்டு வீரர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்... 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.!! கால்வாயில் வீசப்பட்ட உடல்.!!
சிக்கனமாக நடைபெற்ற அம்பானி இல்ல திருமணம்
மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தை சிக்கனமாக நடைபெற்ற திருமணம் என பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 5,000 கோடி ரூபாய் செலவு செய்தும் சிக்கனமான திருமணம் எனக் கூறுவதற்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகிறது. அதாவது ரிலையன்ஸ் நிறுவன அதிபரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பில் திருமணத்திற்காக 0.5% மட்டுமே செலவிடபட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சராசரியான இந்திய திருமணத்தில் ஒரு நபரின் சொத்து மதிப்பிலிருந்து 20-25% திருமணத்திற்காக செலவிடப்படுகிறது. அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தத் தொகை மிகவும் குறைவு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
அம்பானியின் சொத்து மதிப்பு
சமீபத்தில் வெளியிட்ட தகவல்களின்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 12,370 கோடி அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் இந்திய மதிப்பில் 7.65 முதல் 10 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவரது ரிலையன்ஸ் நிறுவனம் ஐடி துறை, மொபைல் நெட்வொர்க், எலக்ட்ரானிக்ஸ், ரெடிமேட் ஆடைகள், சூப்பர் மார்க்கெட், பெட்ரோ கெமிக்கல் என அனைத்து முக்கிய துறைகளிலும் கிளை நிறுவனங்களைக் கொண்டு இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக வலம் வருகிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை அமைத்து இருக்கிறது. இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான அம்பானி தனது மகன் திருமணத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பது மிகவும் சிக்கனமான திருமணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாடகக் காதல்... கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.!! 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது.!!