உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா ஆட்சி தப்புமா.? நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு.! யாருக்கு சாதகம்.?



uddhav thackeray to prove majority tomorrow

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக, சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பியுள்ள நிலையில், ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் மற்றும் 10 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர்.  

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் திரும்பியுள்ளனர்.

சிவசேனா தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரியும் மகாராஷ்டிரா கவர்னரிடம் நேற்று பாஜக கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சட்டசபையை நாளை உடனடியாக கூட்டி வாக்கெடுப்பு நடத்தி மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் நிற்பத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்பட்சத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.