96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உக்ரைனிய பெண்ணை காதலித்து கரம்பிடித்து இந்திய இளைஞர்..! போருக்கு மத்தியில் திருமணம்.!!
உக்ரைனுக்கு வேலைக்காக சென்று உக்ரைன் பெண்ணை காதலித்த இளைஞர், அவரை கரம்பிடித்து இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் போர் ஒரு வாரம் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டை கைப்பற்ற ரஷியா பல்முனை தாக்குதலை ஈடுபடுத்தி வருகிறது. உக்ரைனில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறவும் அந்தந்த நாடுகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அனைவரும் தற்போது வரை வெளியேறி வருகின்றனர். உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அககதியாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரினை சேர்ந்த ப்ரதீக் என்ற வாலிபர், உக்ரைன் நாட்டில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். அப்போது, உக்ரைனை சேர்ந்த லியூபோவ் என்ற பெண்ணுக்கும், பிரதிக்குக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது உக்ரைனில் போர் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, தம்பதிகள் இருவரும் கடந்த 23 ஆம் தேதி போர் பதற்ற சூழலியேயே உக்ரைனில் வைத்து திருமணமும் செய்துள்ளனர்.
திருமணம் முடிந்ததும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் இருவரும் இந்தியா வரசொலியுள்ளனர். அவசர கத்தியுடன் இந்தியா வந்த தம்பதி ஐதராபாத் நகருக்கு வந்ததும், குடும்பத்தினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ப்ரதீக்கின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக மணமக்கள் தெரிவிக்கையில், "எங்களின் முதல் சந்திப்பிலேயே நாங்கள் இருவரும் காதல் வயப்பட்டோம். 3 மாதங்களில் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், போர் காரணமாக அவசர திருமணம் செய்து இந்தியா வந்தோம். இங்கு உறவினர்கள் திருமண வரவேற்பை சிறப்பாக நடத்தினர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நாங்கள் கடவுளை வேண்டுகிறோம்" என்று தெரிவித்தனர்.