#Watch: பனியால் விபத்தில் சிக்கிய வாகனங்கள்: ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள கோழிகளை திருடி ஓட்டம்பிடித்த மக்கள்.!!



uttar-pradesh-agra-nh-accident-people-stolen-chicken

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்தது. 

பாலத்தின் மீது வந்துகொண்டு இருந்த வாகனங்கள், அடுத்தடுத்து மோதியதால் நடுவழியில் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

விபத்தில் கோழிகளை ஏற்றிச்சென்ற லாரியும் சிக்கி இருக்கிறது. ஓட்டுநர் காயமடைந்து இருக்கிறார். இதனால் அப்பகுதி வழியே சென்ற வாகன ஓட்டிகள், கோழிகளை தங்களின் வாகனங்களில் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

இதுகுறித்த அதிர்ச்சி காணொளிகள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள கோழிகள் அடையாளம் தெரியாத மக்களால் திருடப்பட்டுள்ளது.