இந்த ஒரு கீரையை சாப்பிட்டாலே.. தக தகணு மின்னுவிங்க.! பார்லர் எல்லாம் தேவையே இல்லை.!



eat-dwarf-copperleaf-for-glowing-skin

பொதுவாக கீரை வகைகளை நம்மில் பலரும் விரும்புவது இல்லை. அவ்வாறு, இல்லாமல் வாரத்தில் இரண்டு நாள் பொன்னாங்கண்ணி கீரை, அரைகீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகளில் ஏதேனும் ஒன்று எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள் பற்றி மருத்துவர் சிவராமன் கூறியதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள் :

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொன்னாங்கண்ணி கீரையை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்வதை பழக்கபடுத்திக் கொள்ள வேண்டும். பொன்னாங்கண்ணி கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாக மாறும்.

இதையும் படிங்க: சிறுநீரக நன்மைக்காக நாம் செய்ய வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Dwarf copperleaf

வாய் துர்நாற்றம் நீங்க பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். மேலும், பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து, உடல் சுறுசுறுப்பாக மாறும்.

மேலும், பொன்னாங்கண்ணி கீரை மூலநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. பொன்னாங்கண்ணி கீரை வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் என இரண்டு வகை உண்டு. இரண்டு வகை பொன்னாங்கண்ணி கீரையும் அதிக வைட்டமின்கள் கொண்டது.

பொன்னாங்கண்ணி கீரையில் தயாரிக்கப்பட்ட தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டும் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.