"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ஒரு ஸ்பூன் நெய் நம் உடலில் 10 அதிசயங்களை நிகழ்த்தும்... தினமும் காலையில் இப்படி முயற்சி செய்யுங்கள்.!
நெய் அளவாக சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது. நெய் சுவைக்காக மட்டுமின்றி மருத்துவத்திற்கும் மிக நல்லது. மேலும், சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து பொலிவாக மாற்றுகிறது. காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் நெய்யை 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வர கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
காலையில் 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வர மலச்சிக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: சிறுநீரக நன்மைக்காக நாம் செய்ய வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
நெய்யில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கடுமையான நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.
நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் எடையை கட்டுக்குள் வைத்து வயிற்று கொழுப்பை கரைக்கிறது. ஆகையால், நெய்யை இந்த மாதிரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயம் தேவையில்லை.
இதில் உள்ள வைட்டமின்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது.
காலையில் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் சருமம் பொலிவாகவும், மென்மையாகவும் மாறும்.
இவ்வாறு, நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் பித்தம், கபம் ஆகியவற்றை சரி செய்கிறது.
மேலும், நெய்யில் உள்ள வைட்டமின்கள் கண்பார்வையை அதிகரிக்க செய்கிறது.
ஒரு ஸ்பூன் நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொலஸ்ராலை குறைக்கும். நெய்யில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது குறிப்பிட தக்கது.
நெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.