நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி., 41 பேர் உயிர் ஊசல்.. உ.பி-யில் பெரும் சோகம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசம்கர் நகரில் செயல்பட்டு வரும் மதுபானக்கடையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்தவர்கள், அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், தீவிர உடல்நல பாதிப்பால் 41 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாராயத்தில் நடத்த கலப்படத்தால் உயிர்பலி நடந்து இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், மதுபான கடாயில் பணியாற்றி வந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மதுபானக்கடையில் மதுபானம் வாங்கியவர்கள் அருந்த வேண்டாம் என ஒலிபெருக்கி மற்றும் உள்ளூர் ஊடகம் மூலமாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.