96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வேலைக்குச்சென்று வந்த கணவன்., பதறியபடி ஓட்டமெடுத்த இளைஞர்: 24 வயது இளம் மனைவியின் தவறான சவகாசத்தால் நடந்த கொடூர கொலை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில், 24 வயது இளம்பெண் கணவரால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
பாரபங்கி பகுதியை சேர்ந்தவர் மோதிலால் சவுகான் (வயது 30). இவரின் மனைவி ரஜினி (வயது 24). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரும் சீதாபூரில் வசித்து வந்துள்ளனர். மோதிலால் செங்கல்சூளையில் வேலைபார்த்து வருகிறார்.
அவரின் மனைவியும் தற்காலிகமாக ஊழியர்கள் தங்கும் குடியிருப்பில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு மோதிலால் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார்.
தனது மனைவியின் நிலையை கண்டபோது, இருவரும் உல்லாசமாக இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளது. இதனைக்கண்டு கொதித்தெழுந்த கணவர், மனைவியை மண்வெட்டி கொண்டு கடுமையாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் பெண்மணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற கணவரை, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் கைது செய்தனர். ரஜினியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.