கற்பழிப்பு கேஸில் மகனை காப்பாற்ற போலி சான்றிதழ்.. அப்பனையும் தூக்கி உள்ளே வைத்த நீதிபதிகள்..!!



Uttar Pradesh Father Try to Save Son Sexual Abuse Case He Submit Fake Certificate in Court

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மகனை காப்பாற்ற தந்தை போலி பிறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் சமரிப்பித்த நிலையில், தந்தையையும் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கைது செய்தனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தை சார்ந்தவர் மாஜிநுள்ளா கான். இவரது மகன் அம்ஜத் (வயது 21). இவர் மும்பையில் உள்ள வடாலா பகுதியில் தங்கியிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

இதுதொடர்பான வழக்கு விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அம்ஜத்தின் தந்தை மாஜிநுள்ளா தனது மகனுக்கு 18 வயது ஆகவில்லை என்றும், அவரை ஜாமினில் வெளியே அனுப்ப வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்து, அம்ஜத்தின் பிறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 

Uttar pradesh

சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட சாந்தாகுரூஸ் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டு நிலையில், காவல் துறையினர் அம்ஜத்தின் சொந்த ஊருக்கு சென்று நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரத்தை காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 

காவல் துறையினரின் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், போலியான பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்த மாஜிநுள்ளா கானின் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். இதனையடுத்து, காவல் துறையினரால் மாஜிநுள்ளா கான் கைது செய்யப்பட்டார்.