96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#ShockingNews: சாக்லேட் சாப்பிட்ட 4 குழந்தைகள் துடிதுடிக்க மரணம்..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!!
தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறார்கள், வீதியில் இருந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் சின்சை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 4 சிறார்கள் தங்களின் வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, தெருவில் சாக்லேட்டுகள் வீசப்பட்டு கிடைத்துள்ளன. இதனைகவனித்த சிறார்கள் சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
சாக்லேட் சாப்பிட்ட சில நிமிடத்திலேயே சிறார்கள் அடுத்தடுத்து மயங்கி விழவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் நால்வரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் பெரும் சோகமடைந்த பெற்றோர் குழந்தைகளின் உடலை கட்டியணைத்து கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, குஷிநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசீந்திர படேல் தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, குழந்தைகள் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, வீதியில் கிடந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டது தெரியவந்தது. மேலும், இதனைப்போன்றதொரு நிகழ்வு கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். விசாரணையை துரிதப்படுத்திய காவல் துறையினர், சாக்லேட்டில் விஷம் கலக்கப்பட்டு சாலையில் வீசியதை உறுதி செய்துள்ளனர்.
மேலும், உணவு பாதுகாப்பு துறையினரும் சாக்லேட் மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இது திட்டமிட்டு நடந்த கொலையா? அல்லது சாக்லேட் கெட்டுப்போனதால் ஏற்பட்ட உயிரிழப்பா? என்பது ஆய்வக அறிக்கை வந்ததும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சாக்லேட்டை யார் கொண்டு வந்து வீதியில் வீசி சென்றனர்? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.