96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஓரினசேர்கைக்கு எதிராக செயல்பட்ட தந்தை எரித்துக்கொலை; மகன் வெறிச்செயல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம், ராயா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயரா கிராமத்தில், சாலையோரம் மர்மமான வகையில் பெட்டி ஒன்று இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் பெட்டியை சோதனை செய்தபோது, அதில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அவர் அந்தபாடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கோட்வாலி கிராமத்தில் வசித்து வரும் அனந்தமூர்த்தி என்பவரின் மகன் மோகன்லால் சர்மா (55) என்பது உறுதியானது.
ஓரினசேர்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த பயங்கரம்
இவரை அவரின் சொந்த மகன் அஜீத், கூட்டாளிகள் கிருஷ்ண வர்மா, தீபக், லோகேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது உறுதியானது. ஓரினசேர்கையாளராக இருந்து வந்த அஜீத், கிருஷ்ண வர்மாவுடன் இயற்கைக்கு மாறான விருப்பத்தில் ஒன்றிணைந்து இருக்கிறார். இந்த விஷயம் மோகன்லாலுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மகனை கண்டித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பரபரப்பு சம்பவம்.. தலைக்கேரிய மதுபோதை.. தந்தை என்றும் பாராமல் அடித்தே கொன்ற மகன்.!
இதனையடுத்து, தந்தை தனது விருப்பத்திற்கு எதிராக இருப்பதாக கருதிய மகன், அவரை கொலை செய்து உடலை பெட்டியில் வைத்து வீசி இருக்கிறார். தந்தையின் அடையாளத்தை மறைக்க முகம் உட்பட பிற உடல் பாகமும் எரிக்கப்பட்டு இருக்கிறது. விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "வீட்டு செலவுக்கு வச்சிருந்த காசு எடுத்து குடிப்பியா..." ஆத்திரத்தில் தந்தையை அரிவாளால் போட்ட 17 வயது மகன்.!