மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அம்மா வீட்டுக்கு போகணும்" - அடம்பிடித்த மனைவியின் மூக்கை அறுத்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்.!
வடமாநிலங்களில் சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்சா பந்தன் பண்டிகையின்போது, சகோதர உறவுமுறை கொண்டவர்கள் தங்களின் சகோதர-சகோதரிகள் கைகளில் ராக்கி கட்டி மகிழ்வது உண்டு. இது அவர்களின் பாசபந்தத்தை பிணைக்க உதவும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இது கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சகோதரனுக்கு ராக்கி கட்ட தாய் வீட்டிற்கு செல்ல வேண்டுகோள்வைத்த மனைவியின் மூக்கு அறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹர்தோய், பனியானி பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவரின் மனைவி அனிதா (வயது 25). சம்பவத்தன்று ரக்சா பந்தன் நிகழ்ச்சிக்கு, தனது வீட்டிற்கு சென்று சகோதரருக்கு ராக்கி கட்ட வேண்டும் என கணவரிடம் மனைவி அன்பு கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த ராகுல், மனைவியை அவரின் தாய் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை.
இதையும் படிங்க: செல்பி எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி தம்பதி தற்கொலை.. தற்கொலை குறிப்பில் பகீர் தகவல்.!
மூக்கை அறுத்த கணவன்
இதுதொடர்பாக தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், வாக்குவாதம் முற்றியபோது ஆத்திரமடைந்த ராகுல் கத்தியை எடுத்து தனது மனைவியின் மூக்கை அறுத்து இருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த மாமியார், தனது மருமகளை மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். அவருக்கு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அனிதாவின் மூக்கை அறுத்த ராகுலை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கலியுகத்தில் எத்தனை கொடுமை?.. 6 வயது சிறுமி, ஆடு பலாத்காரம்.. கிழட்டு காமுகன் அட்டூழியம்..!