குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இன்ஸ்டா முக்கோண காதலால் பயங்கரம்: இளைஞர் 50 முறை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை.! 3 பேர் கைது.!
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண்ணிடம் பேசும்போது, காதலி முக்கோண காதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில், பெண் யாருக்கு என்ற சண்டையில் இளைஞர் கொல்லப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் மாஹிர் (வயது 20). இவர் டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் நகரில் செயல்பட்டு வரும் பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அங்குள்ள பகிர்தி விஹார் பகுதியை சேர்ந்தவர் அர்மான் (வயது 18). அர்மானும் - மாஹிரும் இடையே மரியாதை நிமித்தமான அறிமுகம் உள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழக்கமான பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.
ஆனால், இருவரும் ஒரே பெண்ணுடன் பழகி வந்துள்ளனர் என்பது பின்னாளில் தெரியவந்துள்ளது. இருவரும் வீடியோ கால் பேசும்போது, தங்களின் காதலி தங்கள் இரண்டு பேருடன் பேசுவதை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து, அர்மான் பெண்ணுடன் கொண்ட காதலை கைவிட கூறி மாஹிர் கூறியுள்ளார். இதில் விருப்பமில்லாத அர்மான் பெண் எனக்குதான் என பிரச்சனை செய்துள்ளார். இதனால் இருதரப்பு வாக்குவாதம் நடந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று மாஹிரை நேரில் அழைத்த அர்மான், தனது நண்பர்களான பைசல் (வயது 21), சமீர் (வயது 19) ஆகியோர் உதவியுடன் மாஹிரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
சுமார் 50 முறை உடலில் கத்திக்குத்து காயங்கள் வாங்கிய மாஹிர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மாஹிரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையை தொடர்ந்து, அர்மான் மற்றும் அவனின் 2 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அர்மான் மளிகைக்கடை நடத்தி வருகிறார், பைசல் எல்சிடி டிவி பழுதுநீக்கும் தொழிலாளி, சமீர் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.