மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடந்துபோன காதல் வாழ்க்கை? வாக்குவாதத்தில் மனைவியை கொலை காதல் கணவன்.. துர்நாற்றம், அழுகிய சடலத்தால் அதிர்ந்துபோன உரிமையாளர்.!
உத்திரகன்ட் மாநிலத்தில் உள்ள ஹால்டவாணி, நிலச்சல் காலனி பகுதியை சேர்ந்த பெண்மணி அப்சனா. ருத்ரபூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட அப்சனா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சவுரப் என்ற நபரை காதலித்து இருக்கிறார்.
இதனையடுத்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்தவரை கரம்பிடித்து அப்சனா, தனது பெயரையும் ஆஸ்தா என மாற்றிக்கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11ம் தேதி அப்சனாவின் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் வீட்டின் உரிமையாளர் சந்தேகத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அப்சனா சடலமாக அழுகிய நிலையில் கிடந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விட்டு விசாரணை நடத்தினர்.
அப்சனா கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவரின் கணவர் மாயமாகியதால் அவரை அதிகாரிகள் தேடி வந்தனர். நேற்று சவுரப் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டபோது, மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து தப்பியோடியது தெரியவந்தது.
விசாரணைக்கு பின்னர் சவுரப்பை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். தாயை இழந்து, தந்தை சிறைக்கு சென்றதும் பரிதவித்த குழந்தைகளை அதிகாரிகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காதல் திருமணம் செய்த நபர், வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலமும் அளித்துள்ளார்.