திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜூஸில் போதை மருந்து.. இளைஞரின் மீது விழுந்து இளம்பெண் தகாத செயல்.!
வீட்டிற்கு அழைத்து உல்லாசம் :
இளைஞர்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பணம் பறித்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பழச்சாறில் போதை மருந்தை கலந்து கொடுத்து இந்த மோசமான செயலில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சில காலமாக அமெரிக்காவில் தங்கி வசித்து வந்துள்ளனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நட்பு என்பதை தாண்டி அதீத நெருக்கத்துடன் பழக ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் கொள்ளை, இளம்பெண் பலாத்காரம்.. குழந்தையை கொள்வதாக மிரட்டி துயரம்.!
இந்த சூழலில் அந்த இளைஞர் அமெரிக்காவிலிருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த இளம் பெண் தனது வீட்டிற்கு இளைஞரை அழைத்து இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி இளைஞரின் வீட்டில் பேசிய போது அவர்கள் சம்மதிக்கவில்லை. மீண்டும் இளைஞர் அமெரிக்கா சென்று விட்டார். இந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு மீண்டும் அந்த இளைஞரை விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்த பெண், அங்கிருந்த இளைஞரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நெருக்கமான புகைப்படங்கள் :
அங்கே பழச்சாறில் போதை மருந்தை கலந்த கொடுத்த அந்த பெண் அந்த இளைஞரின் ஆடைகளை அவிழ்த்து அவருடன் நெருக்கமாக இருப்பது போல புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். போதை தெளிந்த பின்னர், அந்த இளைஞரிடம் புகைப்படங்களை காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் செய்ய வைத்து 5 லட்சம் வரை அந்த இளைஞருக்கு செலவுகளை இழுத்து விட்டுள்ளார். அந்த இளைஞரை தனது நண்பர்கள் உதவியுடன் சேர்ந்து வீட்டில் அடைத்து வைத்து திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மறுத்தால் இந்த புகைப்படங்களை போலீஸில் காட்டி, வழக்கு தொடர்வேன் என்று கூறியுள்ளார்.
போலீசில் தஞ்சம் :
இந்த நிலையில் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார் இளம்பெண். பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அந்த பாதிக்கப்பட்ட இளைஞர் சமீபத்தில் அங்கிருந்து தப்பியோடி வந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அந்த பெண் இதுபோல பணக்கார இளைஞர்கள் பலரையும் குறிவைத்து அவர்களுக்கு போதை மருந்து கொடுத்து ஆபாச புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு இளைஞரும் அதே பெண்ணால் பாதிக்கப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எண்ணெய் வாங்க சென்ற சிறுமி... 60 வயது முதியவரின் காம வெறி .!!