குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
டிவி சீரியல் பார்க்கும் பெண்களுக்கு சர்ச்சை மன்னன் நித்தியானந்தா கொடுத்த அட்வைஸ்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!
சர்ச்சைகள் அனைத்திற்கும் பெயர் போனவர் சுவாமி நித்யானந்தா இவரை கடவுளாக நினைத்து மக்கள் சிலர் அவர் கூறும் கருத்துக்களை அப்படியே நம்பி வருகின்றனர்.இந்நிலையில் இவர் மீது சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவித்து போலீசார்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நித்யானந்தா கரீபியன் தீவுகள் பகுதியில் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப் போவதாக கூறியிருந்தார்.மேலும் இதற்காக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு, அதன் மூலம் ஏராளமான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.
இதற்கிடையில் சர்வதேச போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் நித்யானந்தா தொடர்ந்து யூடியூப் சத்சங்கம் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றி ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் பெண்கள் டிவி சீரியல் பார்ப்பது குறித்து கிண்டலடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிவி சீரியல் பாத்துட்டு செத்து போயிடுவீங்க, டிவி சீரியல் பார்த்துட்டு இருக்கும்போதே பியூஸ் போயிடும் தீயசக்திகள் நமது வாழ்க்கை மீது செலுத்தும் ராட்சச தாக்குதல்தான் டிவி சீரியல்கள். டிவி சீரியல்களை பார்த்துவிட்டு நகை, புடவை கேட்டு நச்சரிக்கும் பெண்களால் கணவர்மார்கள் புலம்பி வருகின்றனர். உயிர் மூல லிங்கம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் உடனடியாக டிவி சீரியலை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கைலாச நாட்டை உருவாக்கி விட்டதாகவும், ஞானப்பால் குடிக்க ஆசைப்படுபவர்கள் அங்கே வரலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.