மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"படுக்க வரலைன்னா வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன்.." பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!! டாக்டரின் வெறி.!!
மேற்கு வங்க மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர் அந்தரங்க காட்சிகளை வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் டாக்டரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மயக்க ஊசி போட்டு பலாத்காரம்
கொல்கத்தாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹஸ்னா நகரில் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் கணவர் பீகாரில் வேலை செய்து வரும் நிலையில் அந்த இளம் பெண் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதை தொடர்ந்து அப்பகுதியில் கிளினிக் நடத்தி வரும் நூர் ஆலம் சர்தார் என்பவரின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது இளம்பெண் தனியாக வசித்து வருகிறார் என்பதையறிந்த மருத்துவர் அந்தப் பெண்ணிற்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வீடியோ எடுத்து மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு
மேலும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ பதிவும் செய்திருக்கிறார் மருத்துவர் நூர். இந்நிலையில் மயக்கம் தெளிந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்து மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக தெரிவித்த டாக்டர், தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி இருக்கிறார். மேலும் இதனை வைத்து இளம் பெண்ணை பல தடவை பலாத்காரம் செய்த டாக்டர் அவரிடமிருந்து 4 லட்ச ரூபாய் பறித்திருக்கிறார்.
இதையும் படிங்க: சாதி பெயரைச் சொல்லி, புழுவைப்போல் நடத்தியதால் துயரம்; அரசு அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை.!
கைது செய்யப்பட்ட மருத்துவர்
இந்நிலையில் மருத்துவரின் தொடர் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத இளம் பெண் இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் டாக்டர் நூர் ஆலம் சர்தாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் உள்ள வீடியோ குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... பதினோரு வயது மகள் பாலியல் பலாத்காரம்.!! போக்சோ குற்றவாளி வெறி செயல்.!!