மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடூரத்தின் உச்சம்... பதினோரு வயது மகள் பாலியல் பலாத்காரம்.!! போக்சோ குற்றவாளி வெறி செயல்.!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கைதி தனது மகள் மற்றும் உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
பரோலில் வெளிவந்த போக்சோ குற்றவாளி
சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரை சேர்ந்த நபர் கடந்த 2020 ஆம் வருடம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழக்கில் தண்டனை பெற்ற நிலையில் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
மகள் மற்றும் உறவுக்கார சிறுமி பலாத்காரம்
பரோலில் வெளிவந்த கைதி வீட்டில் ஆளில்லாததை அறிந்து தனது 11 வயது மகள் மற்றும் 12 வயது உறவுக்கார சிறுமி ஆகியோரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் குடும்பத்தாரிடம் தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து குடும்பத்தினர் காவல் துறையிடம் புகார் செய்தனர்.
இதையும் படிங்க: கௌரவ கொலை வழக்கு... தந்தை, தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை.!! இளம் பெண்ணுக்கு கிடைத்த நீதி.!!
தப்பியோடிய குற்றவாளி கைது
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். பரோலில் வெளிவந்த கைதி தனது மகள் மற்றும் உறவுக்கார சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "வா நாம கல்யாணம் கட்டிக்கலாம்.." சிறுமியை கடத்திய வட மாநில தொழிலாளி.!! செக் வைத்த போலீஸ்.!!