Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!
சத்தம் கேட்காமல் இருக்க அந்த இடத்தில் கத்தியால் குத்தினேன்! மனைவியின் பகீர் வாக்கு மூலம்.
மராட்டிய மாநிலத்தில் வசித்து வந்தவர் சுனில் அவரது மனைவி ப்ரணாளி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து 7 மற்றும் 2 வயதில் 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுனில் கடந்த வாரம் படுக்கை அறையில் கத்தியால் பல இடங்களில் குத்தப்பட்டு இறந்து கிடந்தார்.
தனது கணவர் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக ப்ரணாளி கூறியிருந்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார் ப்ரணாலியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டதால் ப்ராணலி தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் அளித்த வாக்குமூலம்.
தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்ப்பு இருந்ததாகவும், அவரை பலமுறை கண்டித்தும் அவர் திருந்தாததால் அவரை படுக்கை அறையில் வைத்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் கத்தும் சத்தம் வெளியில் கேட்க்காமல் இருக்க முதலில் அவரது தொண்டை பகுதியில் குத்தியதாகவும், பின்னர் உடலின் பல இடங்களில் குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிறனாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குழந்தைகள் இருவரையும் சுனிலின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.