ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு!!



will aadhar be mandatory

அரசின் அனைத்து சேவைகளுக்கும் மற்றும் சில தனியார் சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது.

ஆதாரை அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்காக பயன்படுத்துவது மக்கள் மத்தியில் புகார்களைக் கிளப்பியது. தனி ஒரு குடிமகனின் கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து அரசின் இந்த உத்தரவை எதிர்த்து 27 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இது குறித்த வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி புட்டசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது அனைத்துத் துறைகளிலும் பொருளாதார, சமூக வளர்ச்சியில் மக்கள் நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்கு, ஆதார் எந்த வகையில் மக்களுக்கு உதவுகிறது என ஆய்வு செய்தது.

இந்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பை பொறுத்தே நாம் வரும்காலங்களில் ஆதார் எண்ணை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிய வரும்.