96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஓடும் ரயில் மீது கல்வீச்சு!,, சிறுமி படுகாயம்!.. மர்ம நபர்களால் பரபரப்பு..!
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகள் கீர்த்தனா (12). இவர் பாம்பாடி பகுதியில் இயங்கிவரும் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஷ் தனது குடும்பத்தினடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் இரவு மங்களாபுரம்-திருவனந்தபுரம் ரயிலில் ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். ரயிலில், சிறுமி கீர்த்தனா ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தார். ரயில் எடக்காடு ரயில் நிலையம் அருகே வந்த போது, மர்ம நபர்கள் ரயில் மீது கல் வீசினர்.
இந்த சம்பவத்தில் கீர்த்தனாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வலியால் அலறி துடித்தார். கல்வீச்சு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். அப்போது டிக்கெட் பரிசோதகர் விசாரித்த போது, ரயில் மீது கல் வீசியது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த கீர்த்தனா, ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.