96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி? ரீல்ஸ் போட்ட இளைஞர் கைது!
தெலுங்கானாவில் சூப்பர் மார்க்கெட்டில் மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என ரீல்ஸ் வீடியோ போட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அனைவரும் பொழுதுபோக்குக்காக செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்களில் வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த ரீல்ஸ் வீடியோவில் பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தாலும், ஒரு சில அருவருக்கத்தக்க வீடியோக்கள் மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகிய வைரலாகி வருவது வழக்கம்.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அனுமன் நாயக் என்ற இளைஞர் தனது சமூக வலைதள பக்கத்தில் ரீல்ஸ் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் ஒரு வித்தியாசமான வீடியோவை பதிவு செய்து அதனை வைரலாக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அளித்த புகார் அடிப்படையில் அனுமன் நாயக் மற்றும் அவருக்கு உடனடியாக இருந்த நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.