காதலர்தினமாவது, மண்ணாங்கட்டி தினமாவது! எங்களுக்கு தேசம் தான் முக்கியம்! இளைஞர்களின் எழுச்சி!



youngsters avoided valentine day

கடந்த வருடம் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில், நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த (பிப்ரவரி 14) அன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது. 

pulvama attack

இந்த தீவிரவாதத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் வீர மரணம் அடைந்தனர். சுப்ரமணியனுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் கிருஷ்ணவேணி (23) எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒன்றரை வருடத்திலேயே சுப்பிரமணியன் இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. 

பொதுவாக பிப்ரவரி 14 ஆம் தேதி என்றாலே உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் காதலர்தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்தவருடம் அதற்க்கு மாறாக அமைந்துள்ளது.

pulvama attack

இந்தியாவில் அதிகப்படியானோர் நேற்று முதல் காதலர்தினத்தை புறக்கணித்து, கடந்தவருடம் பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில், நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் காதலர்தினமாவது, மண்ணாங்கட்டி தினமாவது... எங்களுக்கு தேசம் தான் முக்கியம் என கூறி  உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு  முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.