குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பறக்க முடியாமல் அவதிப்பட்ட ஆந்தை.! பரிசோதனையில் தெரியவந்த விநோத பிரச்சனை..! வைரல் புகைப்படம்.!
வினோத பிரச்சனை காரணமாக ஆந்தை ஓன்று பறக்க முடியாமல் அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள சஃபோக் ஆந்தைகள் சரணாலத்திற்கு ஆந்தை ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது. சரணாலயத்திற்கு வந்த நாளில் இருந்து ஆந்தை பார்க்கவே இல்லை. ஆந்தைக்கு காயம் ஏதேனும் இருக்கலாம், அதனால்தான் ஆந்தை பறக்கவில்லை என ஊழியர்கள் கருதினர்.
ஆனால், ஆந்தையை சோதனை செய்ததில் ஆந்தைக்கு காயம் ஏதும் இல்லை என்றும், அதிக உடல் எடையால்தான் ஆந்தை பறக்க முடியாமல் அவதி பட்டதும் தெரியவந்துள்ளது. பொதுவாக விலங்குகள், பறவைகள் உடல் பருமனால் பாதிக்கப்படுவதில்லை. அப்படி இருக்க, இந்த ஆந்தை மட்டும் எப்படி இவ்வளவு பருமனானது என சோதித்ததில் அந்த ஆந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அதிகளவில் எலிகள் இருந்ததும், அவற்றை அது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு எடை அதிகமானதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த ஆந்தைக்கு முறையான டயட் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆந்தை சராசரி எடைக்கு வந்ததும் அந்த ஆந்தை சுதந்திரமாக பறக்கவிடப்பட்டுள்ளது. நல்லா சாப்பிட்டு, குண்டா மாறி, பறக்க கஷ்டப்பட ஆந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்கிவருகிறது.