தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பிரபல நடிகையை ஏமாற்றிய இணையதள வர்த்தக நிறுவனம்! அதிர்ச்சியில் நடிகை செய்த செயல்
ஆன்லைனில் ஹெட்போன் வாங்கிய இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவிற்கு அமேசான் நிறுவனம் இரும்பினாலான ஒரு பைப்பை அனுப்பியிருந்தது கண்டு நடிகை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைப் பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் அவ்வப்போது வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பல்வேறு பாமர மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். செல்போன்களுக்கு பதிலாக செங்கல்கள் மற்றும் சோப்புகளை சில வாடிக்கையாளர்கள் பெற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த ஏமாற்றம் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்காவை விட்டுவைக்கவில்லை. அவர் அமேசான் நிறுவனத்தில் விலை உயர்ந்த ஒரு ஹெட்போனை வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு வந்த பார்சலில் ஒரு பைப் போன்ற இரும்பு கம்பி இருந்துள்ளது. இதனால் மிகவும் விரக்தி அடைந்த நடிகை, அந்த பார்சலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதனை அமேசான் நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
Hey @amazonIN! Look what i got instead of the @bose headphones i ordered! Properly packed and unopened box, looked legit... but only on the outside. Oh and your customer service doesnt even want to help, thats what makes it even worse. pic.twitter.com/sA1TwRNwGl
— Sonakshi Sinha (@sonakshisinha) December 11, 2018
நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு பதிலாக அமேசான் நிறுவனத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர். காரணம் இதுபோன்ற ஏமாற்றங்கள் சாதாரண மக்களுக்கு தான் வரும் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நட்சத்திரங்களையும் பாரபட்சமின்றி அமேசான் நிறுவனம் ஏமாற்றியது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கு பதில் அளித்துள்ள அமேசான் நிறுவனம் "தங்களில் இதைப்போன்ற மோசமான அனுபவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு தேவையான உதவியை அமேசான் நிறுவனம் செய்து தரும்" என்றும் கூறியுள்ளது.
Uh-oh! This is unacceptable! Apologies for the recent ordering experience and the subsequent correspondence with our support team. Please share your details here: https://t.co/vIE01Lj9nJ, we'll get in touch with you directly. ^JC
— Amazon Help (@AmazonHelp) December 11, 2018