96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஃப்ரிட்ஜில் குழந்தையை வைத்த தாய்.. செல்போன் மோகத்தால் அரங்கேறிய சம்பவம்.!
சமூக வலைதளங்களில் ஒரு தாய் செல்போனில் பேசிக்கொண்டே தனது குழந்தையை பிரிட்ஜில் தூக்கி வைக்கின்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில் குழந்தையின் தாய் செல்போனில் பேசியபடி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அப்போது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டு இருக்கிறது. வேறு யாரும் வீட்டில் இருப்பதாக தெரியவில்லை.
சமையல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே செல்போன் பேச்சில் கவனமாக இருந்த அந்த பெண் பேசிய படியே சமையலுக்கு காய்கறிகளை வெட்டுகிறார். தான் நறுக்கிய காய்கறிகளை எடுத்து ஃப்ரிட்ஜில் வைப்பதற்காக அவர் செல்கிறார். அப்போது காய்கறிகளை பிரிட்ஜில் வைப்பதற்கு பதில் தவறுதலாக குழந்தையை உள்ளே வைத்து ஃப்ரிட்ஜை மூடி விடுகிறார். தான் என்ன செய்தோம் என்பது குறித்த எந்த லஜ்ஜையும் இல்லாமல் வழக்கம் போல தனது வேலைகளில் ஈடுபடுகிறார்.
Horrible Addiction 😰 pic.twitter.com/D3Pl0a4rsv
— Prof cheems ॐ (@Prof_Cheems) March 30, 2024
அவர் செல்போனில் பேசிய படியே மற்ற வேலைகளில் ஈடுபட குழந்தையின் தந்தை வீட்டிற்கு வருகிறார். குழந்தை எங்கே என்று கேட்டபோது தான் அந்த தாய்க்கு சுயநினைவே வருகிறது. இருவரும் குழந்தையை தேட பிரிட்ஜில் இருந்து அழகை சத்தம் வருகின்றது. உடனடியாக குழந்தையின் தந்தை ஓடிச்சென்று ஃப்ரிட்ஜை திறந்து குழந்தையை காப்பாற்றுகிறார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இது ஒரு விழிப்புணர்வு வீடியோ என்றும், இது புனையப்பட்ட கதை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.