காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
"இந்த உணவெல்லாம் இரவில் சாப்பிடக்கூடாது!" என்னென்ன என்று பார்க்கலாமா!
எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதை சாப்படுவதற்கு ஒரு நேரம் உண்டு. சரியான நேரத்தில் சரியான அளவு உணவை உண்பதின் மூலமே நம் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். எவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருந்தாலும் இரவு நேரத்தில் அவற்றை உண்ணக்கூடாது.
இரவில் நாம் உண்ணும் உணவுகள் நம் தூக்கம், செரிமானம் மற்றும் நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்யத்தையே பாதிக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம். இரவில் தயிர் சாப்பிடுவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இதில் உள்ள குளிர்ச்சி தன்மை சளியை உருவாக்கும்.
அதேபோல் பழங்களை பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிட்டால் சளி மற்றும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்தும். அதே போல் அதிக அளவு புரதம் கொண்ட சிக்கன் ஜீரணிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதனால் இரவில் சிக்கன் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
மேலும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் இரவில் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் நமது தூக்கத்தை கெடுக்கும். மேலும் உலர் பழங்களை இரவில் உண்டால் கடுமையான செரிமானக் கோளாறு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.