அட அட.. வாழை இலையில் இப்படியொரு சுவையான அல்வாவா?.. இன்றே செய்து அசத்துங்கள்..!!



Banana leaf halwa recipe

அல்வாவில் பலவிதமான அல்வாக்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்று வாழைஇலையில் அல்வா செய்வது குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள் :

வாழை இலை - 2 

சோள மாவு - கால் கப் 

சர்க்கரை - கால் கப் 

முந்திரி - 10

பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன் 

நெய் - 6 டேபிள் ஸ்பூன்

Latest news

செய்முறை :

★முதலில் இரண்டு வாழை இலைகளை இலகுவாகவும் இல்லாமல், முற்றியதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருப்பதை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ள வேண்டும். 

★பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் மற்றும் எலுமிச்சம்பழம் சாறு ஊற்றி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

★அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடுபடுத்திய பின்னர் முந்திரி, பூசணி விதைகளை தனித்தனியே சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். 

★பின் சிறிதளவு நெய் ஊற்றி, வாழைஇலை விழுதை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

★அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து வாழையிலை விழுதுகள் கெட்டியாக தொடங்கியதும் சோளமாவு கரைசலை ஊற்றி கிளற வேண்டும்.

★இறுதியாக ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறினால் அல்வா தயாராகிவிடும். இறக்குவதற்கு முன்பாக நெய்யை ஊற்றி வானொலியில் ஒட்டும் பதத்தில் இறக்க வேண்டும்.