காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
வீட்டில் ஏசி(Ac) இருக்கிறதா.? அதை 'ON' செய்யும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.!!
தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி விட்டது. கடும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இன்று பெரும்பாலான வீடுகளிலும் ஏசி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குளிர்காலத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஏசியை கோடை காலத்தில் உடனடியாக பயன்படுத்தினால் அது சேதம் அடையலாம் என தொழில் நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனவே நீண்ட காலம் இயக்கப்படாமல் இருக்கும் ஏசியை பயன்படுத்துவதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக கோடை காலம் தொடங்கியதும் உடனடியாக ஏசியை பயன்படுத்தாமல் அதனை சர்வீஸ் செய்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்தும் போது ஏசியில் இருந்து குளிர்ந்த காற்று கிடைப்பதோடு உங்கள் ஏர்கண்டிஷனரின் ஆயுளும் அதிகரிக்கும். உங்கள் வீட்டு ஏர்கண்டிஷனரை சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால் அது குளிர்ந்த காற்றை வழங்குவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் மின்சாரம் அதிக செலவாகும்.
ஏசியை பயன்படுத்துவதற்கு முன் அவற்றில் இருக்கும் கேஸ் முழுமையாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். சம்மர் டைம் வந்து விட்டால் ஏசியின் கேஸை சரி பார்க்காமல் அதனை இயக்கக் கூடாது. அதிக நேரம் ஏசியை ஆன் செய்து வைத்தாலும் குளிர்ந்த காற்று கிடைக்கவில்லை என்றால் அதன் கம்ப்ரஸரில் அழுத்தம் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது கம்ப்ரஸர் சேதம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொதுவாக ஏசியை ஆன் செய்வதற்கு முன் அதனை நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். மேலும் ஏசி சரி பார்ப்போரை வரவழைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பின்பு ஏசியை இயக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் ஏசியில் இருந்து குளிர்ந்த காற்றை பெறுவதோடு நமது ஏசியும் நீண்ட நாட்கள் உழைக்கும்.