தூக்கம் வரலையா? தினம் திராட்சை சாப்பிடுங்கள்..! திராட்சையில் உள்ள மருத்துவ பலன்கள்..!!



benefits of eating grapes

திராட்சை உடலுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. திராச்சை குறித்த மருத்துவ பயன்பாடுகளை காணலாம்.

அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் மிகவும் முக்கியமானது திராட்சைபழம். திராட்சையில் வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள. இதனால் பித்தத்தை குறைத்து, உடல் வறட்சியை நீக்க உதவுகிறது. 

திராட்சை உண்பதால் ரத்தத்தை சுத்திகரிக்க இயலும். நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. மேலும், மூளை மற்றும் இதயமும் வலிமை பெறும். கல்லீரல் பலவீனத்தால் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை திராட்சை உண்பதன் மூலம் நீக்க இயலும். 

grapes

மேலும் ஜலதோஷத்தினால் ஏற்படும் தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றையும் திராட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது. திராட்சை பழச்சாறை தினமும் குடித்து வருவதால் மார்புசளியை போக்கி நுரையீரலை பாதுகாக்கும். 

இது ரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. திராட்சை குடல் மற்றும் குடல் புண்ணையும் ஆற்றும் தன்மையுடையது. அத்துடன் பசியின்மை, வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் களைப்பை போக்கி ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கவும் உதவுகிறது.