ஜொலிஜொலிக்கும் அழகு பெற.. பேரழகை வழங்கும் எலுமிச்சை தோலில் அசத்தல் பியூட்டி டிப்ஸ்...! உங்களுக்காக இதோ..!



benefits-of-lemon-peel-skin-benefits-tamil

 

நாம் எலுமிச்சை பழச்சாறினை பிழிந்துவிட்டு தோலை பெரும்பாலும் தூக்கி எறிந்துவிடுவோம். எலுமிச்சை சாறை போல, அதன் தோலிலும் பல நன்மைகள் இருக்கின்றன. உடலின் உச்சி முதல் பாதம் வரையிலும் அதனை வைத்து பராமரிக்கலாம். 

எலுமிச்சை தோலில் வைட்டமின், நார்சத்து, தாது, கால்சியம், பொட்டாசியம், ஆண்டி-ஆக்சிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும். உடலின் குருத்தெலும்புகள், தசைநார்கள், ஹார்மோன் சுரப்பிகள் ஆரோக்கியமாகும். இரத்த குழாய் நெகிழ்வுத்தன்மை பெறும், இதயத்தின் இயக்கம் சீராகும்.

health tips

மகத்துவம் மிக்க எலுமிச்சை தோல்:

  • எலுமிச்சை பழத்தோலை குளிப்பதற்கு முன் நீரில் இட்டு ஊறவைத்து, அதனை உடலில் தேய்த்து குளித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
  • தொடையின் இடுக்கு, அக்குள், வியர்வை பாக்டீரியா தொற்று இருக்கும் இடத்தில தேங்காய் எண்ணெய் தடவி எலுமிச்சை தோல் கொண்டு அவ்விடத்தில் சுத்தம் செய்தால் கருமை மறையும்.

health tips

  • நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு கொண்ட எலுமிச்சை தோல் முகப்பரு பிரச்னையை தவிர்க்க உதவி செய்கிறது. எலுமிச்சை தோல் மற்றும் புதினாவை அரைத்து முகத்தில் பூசி பலன் பெறலாம்.