"நீங்க நாய் வளர்ப்பவரா?!" "உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!"



Benefits of pets

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது வீட்டிலும் நாய், பூனை என்று செல்லப் பிராணிகளை வளர்த்து வருகின்றனர். முன்பெல்லாம் பணக்காரர்கள் மட்டுமே செல்லப் பிராணிகளை வளர்த்துவந்தனர். அது கௌரவத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

dogs

ஆனால் இப்போதெல்லாம் துணைக்கு யாருமில்லாத முதியோர்களும், சிறு பிள்ளைகள் இருக்கும் வீட்டிலும் கூட இப்போதெல்லாம் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகின்றனர். அதற்கு காரணம் தனிமை, பயம் என்று பல காரணங்கள் உள்ளன. 

பூனைகள் வளர்ப்பதை விட பெரும்பாலும் நாய் வளர்ப்பதை தான் பலரும் விரும்புகின்றனர். இதற்கு காரணம் நாய்களுடன் தினமும் சிறிது தூரம் நடக்கின்றனர். இது அவர்களுக்கு புத்துணர்ச்சியும், பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கிறது. 

dogs

நாய் வளர்ப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பூனைகளை விட நாய்கள் மக்களை சமூக ரீதியாக பாதுகாப்பாக உணர வைக்கின்றன.