பிராய்லர் கோழி கறி சாப்பிடுவதால் ஆண்மை குறைவு உண்டாகிறதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
இன்றைய நவீன உலகத்தில் ஆண்மை குறைவு என்பது ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இந்த குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் மிகவும் முக்கியமான ஒன்று குறுகிய காலத்தில் வளர்ந்து இறைச்சியாக மாறக்கூடிய பிராய்லர் கோழிகளை அதிகம் சாப்பிடுவதால் உண்டாகிறதாம்.
ஆண்மைக் குறைவால் திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாமல் மனவருத்தத்தில் பல தம்பதியினர் உள்ளனர். இதற்கு முக்கிய காரணியாக நாம் உட்கொள்ளும் உணவு வகைகளைப் பொறுத்து அமைகின்றது. வேலை பளுவின் காரணமாக சமைத்து சாப்பிட முடியாத பல இளைஞர்கள் துரித உணவகத்தில் கிடைக்கும் அசைவ உணவுகளை அதிகமாக வாங்கி சாப்பிடும் நிலை உருவாகி உள்ளது. இங்கு சமைக்கப்படும் பிராய்லர் கோழிகளால் ஆண்களுக்கு பல்வேறு தீமைகள் வருவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.
நாகரிகம் என்ற பெயரில் உணவகங்களில் சாப்பிடும் இளைஞர்களும், `வீக் எண்ட் பார்ட்டி’ என்று சொல்லிக்கொண்டு ஹோட்டல்கள், கிளப்களுக்குச் செல்லும் குடும்பத்தினரும் விரும்பி உண்பது அந்த `பிராய்லர் சிக்கன்’ எனப்படும் கறிக்கோழியைத்தான். சதைப்பற்று நிறைந்த இந்த கறிக்கோழிகள் சாப்பிடுவதற்கு எளிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத விஷயம் தான்.
பல்வேறு பெயர்களில் தயாராகும் கறிக்கோழியை ஆசை ஆசையாக மூக்குமுட்ட ஒரு பிடி பிடிக்கும் நம்மில் பலருக்கு அந்த கோழிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பது தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதன் பாதிப்புகளை பற்றிய அச்சம் நமக்கு இருப்பதில்லை. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஊசிகள் போட்டு குறுகிய காலத்தில் வளர்த்தெடுக்கப்படும் அவற்றைச் சாப்பிடுவதால் நமக்கு நேரும் பாதிப்புகளை அறிந்தும் புரிந்தும் அலட்சியமாக இருக்கிறோம். இந்த கறிக்கோழிகளால் உடல்பருமனில் தொடங்கி மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறை, மாதவிடாய்ச் சிக்கல், புற்றுநோய் என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
பொதுவாக சில வெள்ளை உணவுப்பொருள்கள் விஷம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. வெள்ளை வெளேர் என்றிருக்கும் தீட்டிய அரிசி, சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரை, மைதாமாவு போன்றவற்றின் வரிசையில் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கன் கோழிகளும் அடக்கம் அதில் அடங்கும்.
வெறும் நாற்பதே நாள்களில் ஒரு கோழிக்குஞ்சு முழு கறி கோழியாகிறது. இதற்கு அந்த கோழிகளின் தீவனத்தில் கலக்கப்படும் 12 விதமான ரசாயனங்கள் தான் காரணம். மேலும் சீக்கிரம் வளர வேண்டுமென்பதற்காக ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசியானது செல்களை வேகமாக வளர வைத்து கோழியின் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் அந்தக் கோழிகளுக்கு அளவுக்கதிகமாக அளிக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் அவையும் நோய்வாய்ப்பட்டு அவற்றைச் சாப்பிடும் மனிதர்களையும் நோய்வாய்ப்படச் செய்வதுதான் மிகவும் கொடுமை என்கின்றனர் மருத்துவர்கள்.
நமது உடல் செயல்பாட்டுக்கு ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கின்றன. அவை குறைந்தாலும் பிரச்னைதான்; அளவு கூடினாலும் பிரச்னைதான். அந்தவகையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செலுத்தப்படும் கறிக்கோழிகளைச் சாப்பிடும்போது அவை சமைத்தபிறகு அது நிலைமாறாமல் அப்படியே உடலுக்குள் செல்வதால் ஆண், பெண் இருவருக்கும் பிரச்னைதான்; குறிப்பாக ஆண்களுக்குத்தான் அதிக பிரச்னை. கோழிகளின் தசை வளர்ச்சிக்காகச் செலுத்தப்படும் ஊசிகள் உயிரணுக்களை அழிக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. அது நம்மில் பலருக்கும் புரிவதில்லை. பிராய்லர் சிக்கனுக்குப் பதிலாக நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவது நல்லது.
மேலும், கோழிகளின் கால்பகுதியில்தான் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்கின்றன. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் அமெரிக்கர்கள் கோழியின் கால்களை வெறும் கழிவுப்பொருளாகவே கருதி அவற்றைச் சாப்பிடுவதில்லை. ஆனால், நாம் விரும்பி வாங்கி ருசிப்பது `லெக் பீஸ்’ எனப்படும் கோழிக்கால்களைத்தான்! ஆகவே, இந்த உண்மையைப் புரிந்துகொள்வோம்.
உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படாமலிருக்க பிராய்லர் கறிக்கோழிகளை உண்பதை தவிர்ப்பதே சிறந்தது.