96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உடல் பருமனை குறைக்க அருமையான காலிஃபிளவர் சூப்..வீட்டிலேயே செய்வது எப்படி?..!
காலிபிளவர் சாப்பிடுவதால் கருவில் உள்ள குழந்தையின் முதுகுத்தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அத்துடன் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை இருப்பதால் மூட்டு வலியை குறைப்பதிலும் காலிஃப்ளவர் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், ஒரு கப் காலிஃபிளவரில் 28 - 52 அளவு கலோரிகள் மட்டுமே இருப்பதால், உடலில் கொழுப்புச்சத்து சேர்வதைத் குறைக்க முடியும். உடல் எடையையும் கட்டுப்படுத்தும். இவ்வாறு அதிக சத்துக்கள் நிறைந்த காலிஃபிளவர் சூப் வீட்டிலேயே எப்படி சமைக்கலாம் என்பது குறித்துதான் இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
பால் - 1கப்
பூண்டு - 5 பல்
கோதுமை மாவு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - தேவையான அளவு
காலிஃப்ளவர் - 1
மிளகுத்தூள் - சிறிதளவுசெய்முறை :
★முதலில் காலிபிளவரை முழுமையாக சுத்தம் செய்து, பூவை மட்டும் தனியாக துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அடுத்து காலிஃப்ளவர் தண்டு மற்றும் பூண்டுப்பல் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
★பின் காலிஃப்ளவர் தண்டு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
★தொடர்ந்து ஒரு வாணலியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, அதில் துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு மிளகுத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி அதனை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
★பின் மீண்டும் வாணலியில் வெண்ணெய் விட்டு, முன்பே அரைத்து வைத்த விழுதை சேர்த்து, அதனுடன் கோதுமை மாவு சேர்த்துக் கிளற வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
★நன்றாக கொதித்த பின், அதனுடன் வதக்கிய காலிஃப்ளவர் கலவையை சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து கிளற வேண்டும். விருப்பப்பட்டால் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறினால் சுவையான சூப்பரான காலிஃப்ளவர் சூப் தயாராகிவிடும்.