96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பதற்காக மனைவியை கொன்ற ஓரினச்சேர்க்கையாளர்! பரபரப்பு வழக்கின் முழு விவரம்
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய பூர்வீக குடும்பத்தைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர் தன்னுடைய ஆண் துணையுடன் நிரந்தரமாக தங்குவதற்காக, தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரை தான் கொலையாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, மிட்லேஸ்ப்ரவுக் நகரில் இந்திய பூர்வீக குடியைச் சேர்ந்த மிதேஷ் பட்டேல் தன்னுடைய மனைவியுடன் தங்கியிருந்தார். தங்கள் வீட்டின் அருகிலேயே இவர்கள் சொந்தமாக ஒரு மெடிக்கல் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மிதேஷ் பட்டேல் ஓரினச்சேர்க்கையில் அதிகமாக ஆர்வம் கொண்டவர். படேலின் இந்த பழக்கத்தை பற்றி அவருடைய மனைவிக்கு ஆறு வருடங்களுக்கு முன்னதாகவே தெரியவந்துள்ளது. ஆனால் அவரால் வெளியில் சொல்லமுடியாமல் தவித்துள்ளார்.
மிதேஷ் பட்டேல் சில சமயங்களில் மனைவி வீட்டில் இருக்கும் போது கூட தன்னுடைய துணையை அழைத்துவந்து தனியாக ஒரு அறைக்குள் சென்றுவிடுவார். அவர்கள் ஒன்றாக இருக்க பயன்படுத்திய பாதுகாப்பு உறைகளை அந்த அறையிலேயே விட்டுவிடுவதை பார்த்துதான் அவரது மனைவிக்கு இந்த பழக்கம் பற்றி தெரிய வந்துள்ளது. இதேபோல் அவர் அடிக்கடி செய்துள்ளார்.
கடைசியாக அவருக்கு சிட்னியில் வசித்து வரும் அமித் படேல் என்ற மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்து வரும்பொழுதெல்லாம் மிதேஷ் படேலை சந்திப்பதும் இருவரும் ஒன்றாக உறவுகொள்வதுமாக இருந்துள்ளனர். அமித் படேல் இரண்டு முறை மிதேசின் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது நடுஇரவில் மிதேஷ் தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு அமித்துடன் உறங்க சென்றுள்ளார். இந்த கொடுமைகளை வெளியில் சொல்லமுடியாமல் தவித்துள்ளார் மிதேசின் மனைவி.
மிதேஷ் படேலின் மனைவி 2 மில்லியன் பவுண்ட் மதிப்பில் தனக்கு காப்பீடு செய்துள்ளார். அவர் இறந்தால் அவருடைய கணவருக்கு அந்த தொகை செல்லும். இதனால் மனைவியை சாகடித்துவிட்டு, பின்னர் கிடைக்கும் காப்பீட்டு தொகையை வைத்து சிட்னியில் அமித்துடன் நிரந்தரமாக தங்கிவிட முடிவு செய்துள்ளார் மிதேஷ். தன்னுடைய மனைவியை தானே கொலை செய்து விட்டு மற்றவர்கள் மீது எப்படி பழியைப் போடலாம் என கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேல் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் மிதேஷ்.
இந்நிலையில் கடந்த மே 14 ஆம் தேதி மிதேஷ், காவல் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து விட்டதாகவும் அவர்கள் தன் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மிதேசின் வீட்டை சோதனை செய்ததில் அவரது மனைவி கொலை செய்து கிடப்பதையும், வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதையும் பார்த்துள்ளனர். அப்போது கொலை மற்றும் கொள்ளை நடந்து இருப்பது போல் அவர்கள் உணர்ந்தனர். இருப்பினும் மிதேசின் மேல் சிறிய அளவு சந்தேகம் எழுந்துள்ளது .
இதனைத் தொடர்ந்து மிதேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த துவங்கினர். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களாக நடந்துள்ளது. தன் வீட்டில் கொள்ளை மற்றும் கொலை நடந்த பொழுது தான் வீட்டில் இல்லாததாகவும், வெளியில் இருந்து திரும்பி வந்த பொழுது மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டதாகவும் மிதேஷ் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால் இந்த கொலையை மிதேஷ் தான் செய்தார் என்பது மிதேஷ் மற்றும் அவரது மனைவி மொபைல் போனில் பயன்படுத்திய ஹெல்த் ஆப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெல்த் ஆப் ஒரு மனிதனின் அசைவுகளை சேகரிக்கும் வசதி கொண்டது. மொபைல் வைத்திருக்கும் அந்த நபர் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு தூரம் நடக்கிறார், எந்த வேகத்தில் செல்கிறார் போன்ற அசைவுகளை சேகரிக்கும் தன்மை கொண்டது செயலி. அந்த வகையில் மிதேசின் செல்போனை ஆராய்ச்சி செய்தபோது கொலை நடந்த அந்த நேரத்தில் அவர் தன்னுடைய வீட்டில் மேலும் கீழுமாக, அங்கும் இங்கும் சிலநேரம் நடந்துள்ளார். ஆனால் அவருடைய மனைவியின் மொபைல் போன் சிறிய தூரம் கொண்டு செல்லப்பட்டு தூரத்தில் வீசப்பட்டுள்ளது.
பின்னர் ஒரு பாலிதீன் கவர் மூலம் தன்னுடைய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் மிதேஷ். இவை அனைத்தும் அவரது அந்த ஹெல்த் ஆப்ல் பதிவாகியுள்ள அசைவுகளை வைத்து போலீசார் தெரிந்து கொண்டுள்ளனர். இறுதியாக நிதேஷ் பணத்திற்காக தன்னுடைய மனைவியை கொலை செய்ததும், தன்னுடைய ஆண் நண்பர் அமித் படேலுடன் நிரந்தரமாக தங்குவதற்காக இவ்வாறு செய்ததையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் வீட்டில் கொள்ளை நடந்தது போல் காட்ட தானே வீட்டில் உள்ள பொருட்களை களைத்து போட்டடத்தையும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.