96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பச்சைப் பட்டாணியின் இரகசிய சத்துக்கள் தெரியுமா உங்களுக்கு.!? வாருங்கள் பார்ப்போம்.!
பச்சைப் பட்டாணியை இரண்டு விதமாக உணவில் பயன்படுத்தலாம். அவை உலர்ந்த பட்டாணியாகவும், பச்சைப்பட்டாணியாக உணவில் சேர்த்து சமைக்கலாம். உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து வேக வைத்தும், பச்சைப்பட்டணியை நேரடியாகவும் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இதில் பச்சைப் பட்டாணியை வெஜ் குருமா, வெஜ் பிரியாணி, மசாலா குருமா போன்ற சமையலில் உபயோகிக்கிறார்கள்.
பச்சைப் பட்டாணியை சத்தில்லா உணவு என்று கூறப்பட்டாலும், அதில் அதிக அளவு ஸ்டார்ச் அதாவது, கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. பச்சை பட்டாணியில் கலோரிகள் குறைவாக இருக்கும். ஆனால் பொட்டாசியம், நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி3, இரும்புச்சத்து, போலேட், தயமின் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைத்து, சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணியில் உள்ள தாமிரச் சத்துக்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு மிகக் குறைவாக பச்சை பட்டாணியில் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் இரத்த சர்க்கரையை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
பச்சைப் பட்டாணியில் வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புரதம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும். அதனால் பச்சைப் பட்டாணியை அதிகம் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. பச்சைப் பட்டாணியில் உள்ள நியசின், மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமான ட்ரைகிளிசரைடு, விஎல்டிஎல் போன்ற கொலஸ்ட்ரால் உற்பத்தியாவதைத் தடுத்து நிறுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.