ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!



Health benefits of ate orange fruit

குளிர்காலத்தில் எளிதாக கிடைக்கும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். பொதுவாக ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி மற்றும் இருமல் போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

orange fruit

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பாதுகாத்து சுருக்கங்களை தடுக்கிறது. மேலும் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. அதேபோல் ஆரஞ்சு பழத்தில் உள்ள நார் சத்து செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதேபோல் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

orange fruit

குறிப்பாக ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை குறைப்பாட்டை தடுக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.