சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கும் வெந்தயத்தின் அற்புத நன்மைகள்!



Health benefits of Fenugreek seeds

வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

வெந்தயம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதனை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணக் கோளாறு போன்றவற்றையும் சரி செய்கிறது.

Venthayam

குறிப்பாக வெந்தயம் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்களின் அபாயம் குறைக்கப்படுகிறது.

வெந்தயம் சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்து, மாதவிடாய் வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. அதேபோல் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

Venthayam

வெந்தயம் சாப்பிடுவதால் சருமத்தை பராமரித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நோய்க்கு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. எனவே வெந்தயத்தை சாம்பார், ரசம், இட்லி மற்றும் தோசை போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.